கலசபாக்கத்தில் 89 மில்லி மீட்டர் மழை

கலசபாக்கத்தில் 89 மில்லி மீட்டர் மழை பெய்தது.

Update: 2023-09-24 12:22 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் திருவண்ணாமலையில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி காணப்பட்டது.

இதேபோல் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளும் மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக கலசபாக்கத்தில் 89 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது.

மற்ற பகுதியில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

கீழ்பென்னாத்தூர் - 84, செய்யாறு - 78, போளூர் - 62.8, திருவண்ணாமலை - 56, வெம்பாக்கம் - 53, ஆரணி - 47.4, செங்கம் - 42.6. சேத்துப்பட்டு - 37.6, தண்டராம்பட்டு - 30.4, வந்தவாசி மற்றும் ஜமுனாமுத்தூர் - 26.

Tags:    

மேலும் செய்திகள்