சாலை ஓரத்தில் பதுக்கி வைத்திருந்த 800 கிலோ ரேஷன் அரிசி
பொன்னை அருகே சாலை ஓரத்தில் பதுக்கி வைத்திருந்த 800 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் கைப்பற்றினர்.
காட்பாடி தாலுகா, பொன்னையை அடுத்த குமரகுண்டா பகுதியில் சோளிங்கரில் இருந்து சித்தூர் செல்லும் பிரதான சாலையில் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின்பேரில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் வேலூர் மாவட்ட பறக்கும்படை தாசில்தார் விநாயகமூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் திருவலம். சேர்க்காடு கூட்ரோடு மற்றும் பொன்னை பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பொன்னையை அடுத்த குமரகுண்டா பகுதியில் சாலையின் ஓரம் 25 மூட்டைகளில் சுமார் 800 கிலோ ரேஷன் அரிசி அடுக்கி வைத்திருந்ததை கண்ட அதிகாரிகள். ரேஷன் அரிசி மூட்டைகளை கைப்பற்றி திருவலம் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் ரேஷன் அரிசியை பதுக்கிவைத்தது யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.