800 கிலோ ரேஷன் அரிசி காருடன் பறிமுதல்

குலசேகரம் அருகே 800 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

Update: 2022-08-28 13:41 GMT

களியக்காவிளை:

குலசேகரம் அருகே 800 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி புரந்தரதாஸ் தலைமையிலான அதிகாரிகள் சுருளோட்டில் இருந்து குலசேகரம் செல்லும் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது, அதிகாரிகளை கண்டதும் டிரைவர் காரை சாலையோரமாக நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். இதையடுத்து அதிகாரிகள் காரை சோதனை செய்தபோது, சிறு சிறு மூடைகளில் 800 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. விசாரணையில், அந்த ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. அதைதொடர்ந்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து காப்புகாடு அரசு குடோனிலும், காரை விளவங்கோடு தாலுகா அலுவலகத்திலும் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்