கஞ்சி தொட்டி திறக்க முயன்ற 80 பேர் கைது
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஆட்டோ டிரைவர்களுக்காக, நெல்லையில் கஞ்சி தொட்டி திறக்க முயன்ற நேதாஜி சுபாஷ் சேனையினர் 80 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஆட்டோ டிரைவர்களுக்காக, நெல்ைலயில் கஞ்சி தொட்டி திறக்க முயன்ற நேதாஜி சுபாஷ் சேனையினர் 80 பேரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சி தொடக்க திறக்க முயற்சி
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பாக அரசு டவுன் பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதால் ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று கூறி, பாதிக்கப்பட்ட ஆட்டோ டிரைவர்களுக்காக நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு சார்பில் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பாக தலைவர் மகாராஜன் தலைமையில், அந்த அமைப்பினர் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
80 பேர் கைது
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன் தலைமையிலான போலீசார், நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பினரை கைது செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட சில ஆட்டோ டிரைவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து நெல்லை சந்திப்பு அண்ணா சிலை முன்பும், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை முன்பும் நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 80 பேரை போலீசார் கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.