80 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

நாகை அருகே 80 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

Update: 2023-04-29 18:45 GMT

நாகை அருகே 80 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

கண்காணிப்பு பணி

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் போலீசார் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது நாகை அருகே ஆழியூர் பிரதான சாலையில் உள்ள 2 மளிகை கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார், அந்த கடைகளில் சோதனை செய்தனர்.

80 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

இந்த சோதனையில் அந்த கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 80 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து 80 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடைகளின் உரிமையாளர்களான ஆழியூரை சேர்ந்த நைனா முகமது(வயது 34), ராஜா முகமது(40) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

21 பேர் மீது வழக்குப்பதிவு

மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள மளிகை கடைகளில் சோதனை நடத்தப்பட்டு விற்பனைக்காக புகையிலை பொருட்கள் வைத்திருந்த 21 கடை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்