கோவையில் 2 நாட்களில் 80 கிலோ தங்க நகைகள் விற்பனை
கோவையில் அட்சய திருதியையொட்டி 2 நாட்களில் 80 கிலோ தங்க நகைகள் விற்பனையானது. இது கடந்த ஆண்டை விட 20 சதவீதம் குறைவாகும்.
கோவையில் அட்சய திருதியையொட்டி 2 நாட்களில் 80 கிலோ தங்க நகைகள் விற்பனையானது. இது கடந்த ஆண்டை விட 20 சதவீதம் குறைவாகும்.
செல்வம் பெருகும்
அட்சிய திருதியை நாளில் தங்க நகை அல்லது நாணயங்கள் வாங்கினால் ஆண்டு முழுவதும் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். இதனால் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதும்.
பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு அட்சய திருதியை 2 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதனால் நேற்று முன்தினமும், நேற்றும் அட்சய திருதியை கொண்டாடப்பட்டது.
இதன் காரணமாக கோவை மாநகரம் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள நகை கடைகளில் கடந்த 2 நாட்களாக வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள தங்கமயில் ஜூவல்லரியில் பொதுமக்கள் தங்களுக்கு பிடித்த நகைகளை வாங்கி மகிழ்ந்தனர்.
தங்க நகைகள் விற்பனை
கோவையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தங்கம் விலை ஒரு பவுனுக்கு ரூ.5 ஆயிரம் வரை அதிகரித்து இருந்தது.
ஒரு கிராம் தங்கம் ரூ.6 ஆயிரத்தை நெருங்கிய போதும் கோவையில் தங்க நகைக்கடைகளில் நகைகள் வாங்க வாடிக்கையாளர்கள் காலை முதல் திரண்டனர்.
அவர்கள் தங்களின் வசதிக்கு ஏற்ப 1 கிராம் முதல் தங்க நகைகள், நாணயங்களை வாங்கி சென்றனர்.
பெரும்பாலான வாடிக்கையாளர்கள் மோதிரம், கம்மல் உள்ளிட் டவை வாங்க ஆர்வம் காட்டினர். இதனால் நகைக்கடைகளில் விற்பனை சூடுபிடித்தது.
இதனால் கடந்த 2 நாட்களில் கோவை மாவட்டம் முழுவதும் 80 கிலோ தங்கம் விற்பனையானது. இது கடந்த ஆண்டை விட 20 சதவீதம் குறைவாகும்.
பாதுகாப்பான முதலீடு
இது குறித்து கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முத்து வெங்கட்ராம் கூறியதாவது:-
இந்த ஆண்டு அட்சய திருதியை 2 நாட்கள் கொண்டாடப்பட் டது. கோவை மாவட்டத்தில் சுமார் 1000 நகைக்கடைகள் உள் ளன. நேற்று ஒரு பவுன் தங்க நகை ரூ.44,840-க்கும் விற்பனையா னது.
தங்கத்தின் விலை அதிகரித்ததால் கடந்த ஆண்டை விட தங்க நகை விற்பனை குறைந்து உள்ளது.
கடந்த ஆண்டு கோவையில் 100 கிலோ தங்க நகைகள் மற்றும் நாணயங்கள் விற்பனையானது.
ஆனால் இந்த ஆண்டு 20 சதவீதம் குறைந்து 80 கிலோ அளவிற்கு ரூ.50 கோடி மதிப்பிலான நகைகள் விற்பனையாகி உள்ளது. பெரும்பாலும் சிறிய நகைகளின் விற்பனை அதிகமாக காணப் பட்டது.
பொதுமக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை பாதுகாப் பாக கருதுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.