பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது செய்யப்பட்டனா்.
தாளவாடி
தாளவாடியை அடுத்த கெட்டவாடி பகுதியில் தாளவாடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சின்னசாமி தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சிலர் வட்டமாக உட்கார்ந்து கொண்டு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்ததை கண்டனர். உடனே அவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 'அவர்கள் கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த விஸ்வகண்டா (வயது 32), சதீஷ் (23), சிவராஜ் (28), ராஜேஷ் (38), கோபி (57), கணேசா (33), மகேஷ் (31), மாதேவப்பா (63) என்பதும், அவர்கள் பணம் வைத்து சூதாடியதும்,' தெரியவந்தது. இதைத்ெதாடர்ந்து 8 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 24 ஆயிரத்து 80 ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.