பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது
தியாகதுருகம் அருகே பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
தியாகதுருகம்
தியாகதுருகம் அருகே வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், சேகர் உள்ளிட்ட போலீசார் கூத்தக்குடி பகுதியில் தனித்தனியாக ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது கூத்தக்குடி மணிமுக்தா ஆற்றங்கரை பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ராமலிங்கம்(வயது 55), ராஜா(37), செந்தில்குமார்(41), ஜெகநாதன்(27) ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.400-ஐ பறிமுதல் செய்தனர்.
இதேபோல் கூத்தக்குடி நர்சரி பண்ணை அருகே சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த காசிலிங்கம்(44), முருகன்(55), காசி(45), சுப்பிரமணியன்(54) ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.300-ஐ பறிமுதல் செய்தனர்.