பொங்கல் விளையாட்டின் போது இரு தரப்பினர் மோதல் 8 பேர் கைது

சங்கராபுரம் அருகே பொங்கல் விளையாட்டின் போது இரு தரப்பினர் மோதல் 8 பேர் கைது

Update: 2023-01-18 18:45 GMT

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜி(வயது 43). பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் அப்பகுதியில் நடைபெற்ற இசை நாற்காலி போட்டியை அவரது மகன் பிரவீன்ராஜ் பார்க்க சென்றார். அப்போது அதே ஊரை சேர்ந்த ராஜா மகன்கள் கஜேந்திரன்(19) கூச்சலிட்டபடி கொண்டு பிரவீன்ராஜ் மீது விழுந்ததாக தெரிகிறது. இதை தட்டிக்கேட்ட ராஜியை கஜேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து ராஜி கொடுத்த புகாரின் பேரில் அரசம்பட்டை சேர்ந்த கஜேந்திரன், ரமணா(18), ராஜா மனைவி அன்பு(38) ஆகியோர் மீது சங்கராபுரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்தியாகு வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தார்.

இதே போல் விளையாட்டு போட்டியை பார்க்க வந்த கஜேந்திரனை பிரவீன்ராஜ் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கஜேந்திரன் கொடுத்த புகாாின் பேரில் ராஜி, இவரது மனைவி காந்தி(38), மகன் பிரவீன்ராஜ் மற்றும் சரவணராஜ், விக்னேஷ்(22), முருகவேல்(34), முருவாயி(40) ஆகிய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜி, விக்னேஷ், முருகவேல், முருவாயி, காந்தி ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்