வெறி நாய் கடித்து 8 பேர் மருத்துவமனையில் அனுமதி

ஆரணி அருகே வெறி நாய் கடித்து 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Update: 2022-10-31 13:18 GMT

ஆரணி

ஆரணியை அடுத்த மேல்சீசமங்கலம் கிராமத்தில் ஏராளமான நாய்கள் தெருவில் சுற்றி திரிகின்றன.

இதில் ஒரு நாய் வெறி பிடித்த நிலையில் நடந்து செல்பவர்களை குரைத்து வந்தது.

இந்த நிலையில் இன்று அதிகாலை வெறி பிடித்த நாய் சாலையில் சென்றவர்களை விரட்டி சென்று கடித்தது.

இதில் 8 பேர் காயம் அடைந்தனர். மேலும் அந்த நாய் 3 கறவை மாடுகள், 2 கன்று குட்டிகளை கடித்து குதறியது.

இதில் காயம் அடநை்த 8 பேரும் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்