மருந்து பொருட்கள் வாங்கியதில் ரூ.8½ லட்சம் மோசடி

மருந்து பொருட்கள் வாங்கியதில் ரூ.8½ லட்சம் மோசடி குறித்து போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்

Update: 2023-02-23 21:39 GMT


மதுரை திருப்பாலை, சரஸ்வதி நகரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 55). இவர் மருந்து மொத்த விற்பனை நிலையம் வைத்துள்ளார். இந்தநிலையில், கலையரசன் என்பவர், சக்திவேலிடம் ரூ.8 லட்சத்து 47 ஆயிரம் மதிப்புள்ள மருந்து பொருட்களை வாங்கி உள்ளார். மேலும், அதற்கான பணத்தை தவணை முறையில் தருவதாக கூறிவிட்டு அதற்கான பணத்தை கொடுக்காமல் மோசடி செய்துள்ளதாக, திலகர் திடல் போலீசில் சக்திவேல் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்