சேலம் வழியாக சென்றரெயிலில் கடத்திய 8 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் வழியாக சென்ற ரெயிலில் கடத்தப்பட்ட 8 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-02-20 20:55 GMT

சூரமங்கலம்,

ரெயிலில் கஞ்சா கடத்தல்

வட மாநிலங்களில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்துவதை தடுக்கும் வகையில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே போலீசார் ரெயில்களில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இதையொட்டி ரெயில்வே போலீசார் நேற்று அதிகாலை காட்பாடியில் இருந்து சேலம் வரை தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது ரெயிலின் முன்பதிவில்லா பெட்டியில் கேட்பாரற்று ஒரு பை (பேக்) இருந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்து சோதனை செய்ததில் 8 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை ரெயிலில் கடத்தி வந்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணை

விசாரணையில் கைப்பை (பேக்) யாருடையது என்பது தெரியவில்லை. மேலும் கஞ்சாவை கடத்தி வந்த நபர் போலீசார் சோதனை செய்வதை பார்த்ததும் தப்பிச்சென்றது தெரிய வந்தது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 8 கிலோ கஞ்சா சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இது ெதாடர்பாக ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து ரெயிலில் கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்