8 கிலோ கஞ்சா பறிமுதல்
ராமேசுவரம் கடற்கரைப்பகுதியில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் துறைமுக கடற்கரைப் பகுதியில் பார்சல் ஒன்று கிடப்பதாக துறைமுக காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ரத்னவேல் தலைமையிலான போலீசார் அந்த பார்சலை பிரித்து பார்த்த போது அதில் 2 கிலோ எடை கொண்ட 4 பார்சல் என மொத்தம் 8 கிலோ கஞ்சா பார்சல்கள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அந்த கஞ்சாவை கைப்பற்றி கடற்கரையில் போட்டுச் சென்ற அந்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்தும் துறைமுக காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.