8 கிலோ கஞ்சா பறிமுதல்; 4 பேர் கைது

கடமலைக்குண்டு பகுதியில் கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது

Update: 2022-07-18 16:00 GMT

கடமலைக்குண்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்குமார் தலைமையில் போலீசார் பாலூத்து பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சேர்மலையாண்டி கோவில் அருகே ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்ற பாலூத்து கிராமத்தை சேர்ந்த ஜெயபால் (வயது 55) அவருடைய மகள் சத்யா (39) மகன் ஜெயசூர்யா (28) மற்றும் ஆட்டோ டிரைவர் சுந்தரபாண்டி (23) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 கிலோ கஞ்சா, ரூ.40 ஆயிரம் மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்