8 கிலோ கஞ்சா, ரூ.70 ஆயிரம் பறிமுதல்: 2 பேர் கைது

கருமத்தம்பட்டியில் 8 கிலோ கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-30 18:45 GMT

கருமத்தம்பட்டி

கோவை மாவட்ட புறநகர் பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் பகுதியில் தீவிர ரோந்து பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கருமத்தம்பட்டி நால் ரோட்டு பகுதியில் சப் - இன்ஸ்பெக்டர் திலக் தலைமையிலான தனிப்படை போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையை சேர்ந்த முருகன் என்பவரது மகன் கண்ணன் (வயது22) மற்றும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த தேவராஜ் என்பவரின் மனைவி லட்சுமி (38) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்து 8 கிலோ கஞ்சாவையும் ரூ.70 ஆயிரம் பணத்தையும் போலீசார் கைது செய்து அவர்களை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்