ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் படுகாயம்

பண்ருட்டி அருகே ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2022-06-23 18:54 GMT

பண்ருட்டி, 

பண்ருட்டி அருகே சாத்திப்பட்டு கிராமத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு ஆட்டோ ஒன்று பண்ருட்டி நோக்கி வந்து கொண்டிருந்தது. சிறிது தூரம் வந்தபோது, அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள், சாலையின் குறுக்கே சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆட்டோ டிரைவர் மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது மோதாமல் இருக்க ஆட்டோவை திருப்பினார். இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் ஆரோக்யசாமி(வயது 35), சீரங்குப்பத்தை சேர்ந்த கலாவதி(35), சுமித்ரா(17), வைரம்(40), சரண்யா(35), ரம்யா(14), விஜயலட்சுமி(32), புனிதா(30) ஆகியோா் படுகாயமடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து கலாவதி, சுமித்ரா, வைரம் ஆகியோர் மட்டும் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்