கார் மோதி 8 ஆடுகள் செத்தன

கறம்பக்குடி அருகே கார் மோதி 8 ஆடுகள் செத்தன. ஆடு மேய்க்கும் தொழிலாளி படுகாயமடைந்தார்.

Update: 2022-06-09 18:32 GMT

கறம்பக்குடி:

மேய்ச்சல்

கறம்பக்குடி அருகே உள்ள எம்.தெற்குத்தெரு குருவன் கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சித்திரவேல் (வயது 37). இவரது தம்பி ராஜ்குமார். இவர்கள் இருவரும் செம்மறி ஆடுகளை மேய்க்கும் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் கறம்பக்குடி பகுதியில் மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை அவர்களது வீட்டிற்கு ஓட்டி சென்று கொண்டிருந்தனர்.

8 ஆடுகள் செத்தன

கறம்பக்குடி அருகே உள்ள தீத்தானிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது பின்னால் கறம்பக்குடியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற கார் சாலையில் சென்றுகொண்டிருந்த செம்மறி ஆட்டு மந்தைக்குள் புகுந்தது. இதில் கார் சக்கரத்தில் சிக்கி 8 ஆடுகள் பலியாகின. மேலும் ஆடுகளை ஓட்டி சென்ற தொழிலாளி சித்திரவேல் படுகாயமடைந்தார்.

இதை கண்ட அப்பகுதி மக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மழையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்