வெறிநாய்கள் கடித்து 8 ஆடுகள் பலி: ஆலங்குடி-பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியல்

வெறிநாய்கள் கடித்து 8 ஆடுகள் பலியானதால் ஆலங்குடி-பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-04 19:18 GMT

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு குறுந்தடிபுஞ்சை பகுதியை சேர்ந்தவர் பாலச்சந்தர். இவர் தனது வீட்டில் 8 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று மாலை தனது தோட்டத்தில் கட்டி ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது 6 வெறி நாய்கள் ஒன்று சேர்ந்து கடித்து குதறியதில் 8 ஆடுகளும் பலியாகின. இதனால் பாதிக்கப்பட்ட ஆட்டின் உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் இறந்த ஆடுகளை ஆலங்குடி-பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு தீபக்ரஜினி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் வடகாடு ஊராட்சி மன்றத்தில் வைத்து இழப்பீடு வழங்குவது குறித்தும், வெறிநாய்களை கட்டுப்படுத்துவது குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதில், சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்