வெள்ளகோவில் அருகே 8 ஆடுகள் நாய்கள் கடித்து செத்தன.
ஆடுகள் சாவு
வெள்ளகோவில் அருகே உள்ள காடையூரான்வலசு என்ற பகுதியில் கனகராஜ் என்பவர் தனது தோட்டத்தில் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகின்றார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் ஆடுகளை தோட்டத்து பட்டியில் அடைத்து வைத்திருந்தார். மீண்டும் மறுநாள் காலையில் சென்று பார்த்தபோது 8 ஆடுகள் செத்துக்் கிடந்தன. 2 ஆடுகள் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன.
இதுகுறித்து கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுத்து தகவலின் பேரில் காயம் பட்ட ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தார். ஆடுகள் எப்படி செத்தன என்று ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அந்த பகுதியில் சுற்றித்திரிந்த நாய்களின் வாயில் ரத்தக்களை இருந்தது. எனவே நாய்கள்தான் ஆட்டுப்பட்டிக்குள் புகுந்து நாய்களை கடித்து குதறி கொன்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து செத்து ஆடுகள் அனைத்தும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
இழப்பீடு
செத்துப்போன ஆடுகளின் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவரது தோட்டத்தில் இருந்த ஆடுகளை நாய் கடித்தது. அதேபோல் பக்கத்து தோட்டத்திலும் நாய்கள் ஆடுகளை கடித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாச்சிபாளையம், சொரியங்கிணத்துபாளையம், கச்சேரி வலசு, சேனாபதிபாளையம் ஆகிய பகுதிகளில் நாய்கடித்து 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளன. ஆடு வளர்ப்பதையே நம்பி இருக்கும் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். நாய்கள் கடித்து செத்துப்போன ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.