நாகை மாவட்டத்திற்கு 8-ந்தேதி உள்ளூர் விடுமுறை
நாகை மாவட்டத்திற்கு 8-ந்தேதி உள்ளூர் விடுமுறை
வெளிப்பாளையம்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 8-ந்தேதி(வியாழக்கிழமை) அன்னையின் பிறந்தநாள் விழா நடைபெறுவதை முன்னிட்டு நாகை மாவட்டத்திற்கு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இதனை ஈடு செய்யும் விதமாக வருகிற 24-ந்தேதி அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. மேலும் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு நாகை மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களை கொண்டு செயல்பட வேண்டும் என மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.