ரூ.8 கோடியில் மாவட்ட அளவிலான நவீன விளையாட்டு மைதானம்

ரூ.8 கோடியில் மாவட்ட அளவிலான நவீன விளையாட்டு மைதானம்

Update: 2023-10-11 19:45 GMT

திருப்பத்தூர் நகரத்தை மையமாகக் கொண்டு மாவட்ட அளவிலான நவீன விளையாட்டு மைதானம் அமைத்திட வேண்டும் என அ.நல்லதம்பி எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்து இருந்தார். அவரின் கோரிக்கையை ஏற்று ரூ.8 கோடி மதிப்பீட்டில் திருப்பத்தூரில் நவீன விளையாட்டு மைதானம் அமைக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து நல்லதம்பி எம்.எல்.ஏ., இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்