ரூ.8 கோடியில் வளர்ச்சி பணிகள்

ரூ.8 கோடியில் வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2023-04-25 20:08 GMT

சிவகாசி, 

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியான விருதுநகர்- திருத்தங்கல் சாலையில் ரூ.3 கோடி செலவில் செயல்பட்டு வரும் நுண்உர செயலாக்க மையம், ஒருங்கிணைந்த நகர்புற மேம்பாட்டு பணி திட்டம் மூலம் ரூ.40 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு வரும் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி, கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் மூலம் ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் நடைபெற்று வரும் நவீன எரிவாயு தகன மேடை, கழிப்பறை, வாகன நிறுத்தம் அமைக்கும் பணி, சிவகாசி பஸ் நிலையத்தில் ரூ.36 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் சுகாதார வளாகம், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் மூலம் ரூ.2 கோடியே 61 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் அறிவுச்சார் மையம், ரூ.22 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் நகர சுகாதார ஆய்வுக்கூடம் ஆகியவற்றை கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார். அப்போது திட்ட இயக்குனர் தண்டபாணி, சிவகாசி மாநகராட்சி கமிஷனர் சங்கரன், என்ஜினீயர் சாகுல்அமீது, தாசில்தார் லோகநாதன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்