தலைவர், வார்டு உறுப்பினர் பதவிக்கு 8 பேர் வேட்பு மனு தாக்கல்
கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்கு 8 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்கு 8 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
நெம்பர் 10 முத்தூர்
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் நெம்பர் 10. முத்தூர் கிராம ஊராட்சி தலைவர் பதவி, குருநல்லி பாளையம் கிராம ஊராட்சி 4-வது வார்டு,
சொக்கனூர் கிராம ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவி, நல்லட்டிபாளையம் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன. அவற்றுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும்.
நேற்று 12 மணிக்கு மேல் நல்லநேரம் என்பதால் கிணத்துகடவு ஊராட்சி ஒன்றியத்தில் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்றது.
ஊராட்சி தலைவர் பதவி
நேற்று காலை நெம்பர் 10. முத்தூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு சதீஷ்குமார் (வயது37) தனது ஆதரவாளர்களுடன் வந்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.ராஜேஸ்வரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
மேலும் முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெயக்குமாரின் மனைவி மஞ்சுசவுமியா (39), மகன் நிகில் கங்கேஷ் (21) ஆகியோர் தங்களின் ஆதரவாளர்களுடன் வந்து தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
நல்லட்டிபாளையம் ஊராட்சி 4- வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மாறன் (72), சுரேஷ் (39) ஆகிேயார் நேற்று உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மு.பொன்மணியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
8வேட்பு மனு தாக்கல்
சொக்கனூர் ஊராட்சியில் 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அன்னக்கொடி (34) என்பவர் உதவி தேர்தல் நடத்தும் லீனா சகாய மேரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
குருநெல்லி பாளையம் 4-வது வார்டிற்கு பேச்சிமுத்து (45), தாமோதரன் (34) ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜென்கின்ஸ்சிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அந்த வகையில் நேற்று மொத்தம் 8 பேர் வேட்பு மனு தாக்கல் செய்ய ஆதரவாளர் களுடன் வந்ததால் கிணத்துக் கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.
நேற்றுவரை நெம்பர்.10.முத்தூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு 3 பேர், நல்லட்டிபாளையம் வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேர்,
குருநெல்லிபாளையம் வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேர், சொக்கனூர் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.