778 பேர் நீட் தேர்வு எழுதினர்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 778 பேர் நீட் தேர்வு எழுதினர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிப்காட் பெல் டி.ஏ.வி. பள்ளி, சோளிங்கர் கிருஷ்ணாவரத்தில் உள்ள வித்யா பீடம் சி.பி.எஸ்.இ. பள்ளி ஆகிய 2 மையங்களில் நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. பெல் டி.ஏ.வி. பள்ளியில் 528 பேரில் 520 பேர் தேர்வு எழுதினர். 8 பேர் தேர்வு எழுதவில்லை. வித்யாபீடம் பள்ளியில் 264 பேருக்கு 258 பேர் தேர்வு எழுதினர். 6 பேர் தேர்வு எழுதவில்லை. 2 மையங்களிலும் தீவிர சோதனைக்கு பின்னர் மாணவ- மாணவிகள் தேர்வு அறைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
மாணவ -மாணவிகள் மையத்திற்கு வந்து செல்வதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில், ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.