73 எடை கருவிகள் பறிமுதல்

தொண்டி பகுதியில் 73 எடை கருவிகளை பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2022-11-18 18:45 GMT

தொண்டி, 

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின்படி தொண்டி பகுதியில் உள்ள காய்கறி கடைகள், பழக்கடைகள், கறிக்கடைகள், மீன்கடைகள், மற்றும் தெருவோர கடைகள் உள்பட அனைத்து கடைகளிலும் ராமநாதபுரம் தொழிலாளர் துணை ஆய்வாளர் கதிரவன் தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், முத்திரை ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மறு முத்திரையில்லாமல் பயன்பாட்டில் வைத்திருந்த 9 மின்னணு தராசுகள், 23 விட்ட தராசுகள், 41 இரும்பு எடைக்கற்கள் என மொத்தம் 73 எடைக்கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இனிவரும் காலங்களில் வணிகர்கள் மறுமுத்திரையில்லாமல் எடையளவுகள் பயன்பாட்டில் வைத்திருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர். இந்த தகவலை ராமநாதபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் பாரி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்