70-வது ஆண்டு கம்பசேவை திருவிழா நிறைவு
தேத்தாக்குடி தெற்கு யாதவபுரத்தில் 70-வது ஆண்டு கம்பசேவை திருவிழா நிறைவு
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே தேத்தாக்குடி தெற்கு யாதவபுரத்தில் வெங்கடாஜலபதிக்கு ஆண்டுதோறும் கம்ப சேவை திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 70-வது ஆண்டாக கம்ப சேவை திருவிழா கடந்த 5-ந் தேதி முதல் கொண்டாடப்பட்டு வந்தது. விழாவை முன்னிட்டு பக்தா்கள் கம்ப விளக்கு ஏந்தி வந்து வெங்கடாஜலபதி சன்னதியில் வைத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து நாள்தோறும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா நாட்களில் அரிச்சந்திரா புராண நாடகம், பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள், திருவிளக்கு பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இந்த விழா நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.