அரசு பள்ளியில் 700 புத்தகங்கள் திருட்டு

அரசு பள்ளியில் 700 புத்தகங்கள் திருடுபோனது

Update: 2022-10-15 20:18 GMT

மேலூர்

மேலூர் யூனியனில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு வழங்குவதற்கு தேவையான அரசு வழங்கும் இலவச புத்தகங்களை மொத்தமாக வைக்கும் பாதுகாப்பு கட்டிடம் மேலூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ளது. இந்த கட்டிட ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 700 புத்தகங்களை திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து மேலூர் ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் அழகுமீனா மேலூர் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்