தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

முகநூலில் சிறுமிகளின் ஆபாச படங்களை பதிவிட்ட தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2023-09-11 16:24 GMT

திண்டுக்கல்லை அடுத்த ஏ.வெள்ளோடு அருகே உள்ள சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஏஞ்சல்ராஜ் (வயது 30). கூலித்தொழிலாளி. இவர், முகநூல் பக்கத்தில் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்ததாக காணாமல் போன மற்றும் கடத்தப்பட்ட குழந்தைகளுக்கான தேசிய மையத்துக்கு (என்.சி.எம்.இ.சி.) புகார் வந்தது. இதையடுத்து அந்த மையம் சார்பில், திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார், ஏஞ்சல்ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நீதிபதி கருணாநிதி வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் அமுதா ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட ஏஞ்சல்ராஜூக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்