தனியார் கல்லூரி வேன் மீது பஸ் மோதி மாணவ-மாணவிகள் 7 பேர் படுகாயம்

தனியார் கல்லூரி வேன் மீது பஸ் மோதி மாணவ-மாணவிகள் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-07-23 18:20 GMT

கரூர் அருகே உள்ள புலியூரில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிக்கு சொந்தமாக வேனில் லாலாபேட்டை, கிருஷ்ணராயபுரம் பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள்  கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த வேன் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள கரட்டுப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக கரூரில் ஒரு தனியார் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கல்லூரி வேன் மீது பஸ் மோதியது. இதில் கல்லூரி வேனில் பயணம் செய்த மாணவிகள் போதும்பொண்ணு (வயது 21), பிரேமலதா (21), தனுசியா (21), மாணவர்கள் நவீன்குமார் (21), சக்திவேல் (18), பரமசிவம் (19), சவுந்தர்ராஜன் (18) ஆகிய 7 பேரும் படுகாயம் அடைந்தனர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த 7 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்