மேல்மலையனூர் அருகே 7 ஆடுகள் திருட்டு

மேல்மலையனூர் அருகே 7 ஆடுகளை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2023-07-07 18:45 GMT

மேல்மலையனூர், 

மேல்மலையனூர் அருகே செவலபுரை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் முருகன் (வயது 40). இவர் ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு முருகன் மேய்ச்சலுக்கு விடப்பட்ட ஆடுகளை ஓட்டி வந்து, வீட்டின் அருகே உள்ள பட்டியில் அடைத்து விட்டு தூங்கச் சென்று விட்டார். நேற்று காலை பார்த்தபோது பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 6 வெள்ளாடுகள், ஒரு செம்மறி ஆடு என மொத்தம் 7 ஆடுகளை காணவில்லை. அதனை நள்ளிரவில் மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடுகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்