7 ஆய்வு கட்டுரைகள் தேர்வு
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாட்டிற்கு 7 ஆய்வு கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருப்பத்தூர் மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது. மாவட்டத் தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்கள் ஜூனியர் பிரிவிலும், 9 முதல் 12-ம் வரை படிக்கும் மாணவர்கள் சீனியர் பிரிவிலும் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு வழிகளிலும் 57 ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். இதில் 7 ஆய்வு கட்டுரைகள் மாநில மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டன. ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்த அனைத்து மாணவர்களுக்கும், வழிகாட்டி ஆசிரியர்களுக்கும் மாவட்ட உதவி திட்ட அலுவலர் பிரபாகரன் பாராட்டு சான்றிதழ்களையும், கேடயத்தையும் வழங்கி வாழ்த்திப் பேசினார்.
முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் மங்கையர்க்கரசி, மாவட்ட கவுரவத் தலைவர் அச்சுதன், துணைத் தலைவர்கள் சத்தியமூர்த்தி, துரைமணி, துணைச் செயலாளர்கள் முருகன், சபாரத்தினம், மாவட்ட செயற்குழு ராமநாதன், சரவணன், கோவிந்தராஜன், கிருஷ்ணமூர்த்தி, பரிமளாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட செயலாளர் மாணிக்க முனிராஜ் வரவே