பீளமேடு அருகே வீடு புகுந்து 7½ பவுன் நகை திருட்டு
பீளமேடு அருகே வீடு புகுந்து 7½ பவுன் நகை திருடப்பட்டது.
பீளமேடு
கோவை பீளமேடு அருகே உள்ள தொட்டிபாளையம் பிரிவை சேர்ந்தவர் சின்னராஜ். இவருடைய மனைவி ராணி (வயது 46). இவர் வீட்டு வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 7½ பவுன் தங்க நகையை காணவில்லை. அதை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.