லாரி டிரைவர் வீட்டில் 7 பவுன் நகை, பணம் திருட்டு

அரக்கோணம் அருகே லாரி டிரைவர் வீட்டில் 7 பவுன் நகை, பணம் திருட்டுப்போனது.

Update: 2022-06-26 16:24 GMT

அரக்கோணத்தை அடுத்த வேடல் காந்தி நகர் பகுதியை சார்ந்தவர் சங்கர் (வயது 42). லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராதிகா. இவர்களுக்கு 1 மகன் மற்றும் 1 மகள் உள்ளனர். சங்கர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் குடும்பதினருடன் திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சம் திருட்டுபோயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சங்கர் அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் அரக்கோணம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்