நகராட்சி பெண் ஊழியரிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு

கொல்லங்கோட்டில் நகராட்சி பெண் ஊழியரிடம் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் ேதடி வருகிறார்கள்.

Update: 2023-04-25 17:22 GMT

கொல்லங்கோடு, 

கொல்லங்கோட்டில் நகராட்சி பெண் ஊழியரிடம் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் ேதடி வருகிறார்கள்.

நகராட்சி ஊழியர்

கொல்லங்கோடு அருகே தமிழக-கேரள எல்லை பகுதியான பழைய உச்சக்கடைைய சேர்ந்தவர் ஷிபு. இவரது மனைவி பிளஸ்சி (வயது 33). தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர் கொல்லங்கோடு நகராட்சியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது தந்தை வீடு கொல்லங்கோடு கச்சேரிநடை பகுதியில் உள்ளது.

இந்தநிலையில் நேற்று மாலையில் வேலை முடிந்த பின்பு பிளஸ்சி தந்தையின் வீட்டிற்கு செல்வதற்காக கச்சேரிநடை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர்.

நகை பறிப்பு

அவர்கள் பிளஸ்சியின் அருகே வந்ததும் பின்னால் இந்த நபர் அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலி சங்கிலியை பறித்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த பிளஸ்சி 'திருடன்... திருடன்...' என சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி சென்றனர்.

இது குறித்து பிளஸ்சி கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகிறார்கள். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

நகராட்சி பெண் ஊழியரிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

--

Tags:    

மேலும் செய்திகள்