நெல்லை மாநகரில் போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் மது பாட்டில்கள், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதன்படி பெருமாள்புரம் போலீசார் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்றதாக பாளையங்கோட்டை திருமால்நகரை சேர்ந்த முருகன் (வயது 41) என்பவரையும், தச்சநல்லூர் போலீசார் தச்சநல்லூர் மங்கலகுடியிருப்பு பகுதியை சேர்ந்த சுடலைமுத்து என்பவரையும், பாளையங்கோட்டை போலீசார் பாளையங்கோட்டை கோட்டூர் பகுதியை சேர்ந்த கணேசன் (69) என்பவரையும் முப்பிடாதியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அஜித்குமார் (26) என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 51 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். அதேபோல் மாநகர மதுஒழிப்பு மற்றும் அமலாக்கப்பிரிவு போலீசார் தச்சநல்லூரை சேர்ந்த ஆறுமுகநயினார், பாளையங்கோட்டையை சேர்ந்த முருகன் (48), தாழையூத்தை சேர்ந்த சின்னதுரை (46), மேலப்பாளையத்தை சேர்ந்த மாரியப்பன் (53) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 26 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.