பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது

வேதாரண்யம் அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது

Update: 2023-05-02 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி, சப்- இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் வேதாரண்யம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வேதாரண்யம் கடற்கரையில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 47), மனோகரன் (33), அன்பு செல்வன் (39), மாரியப்பன் (55), முத்துவேல் (39), சித்தையன் (32) மற்றும் குளச்சல் பகுதியை சேர்ந்த பிரவின் (32) ஆகிய 7 பேர் பணம் வைத்து சூதாடிகொண்டிருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 7 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்