பெண்ணிடம் தகராறு செய்த 7 பேர் கைது
பெண்ணிடம் தகராறு செய்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலையழகுபுரம் பகுதியை சேர்ந்தவர் புவனேஷ்குமார். இவருடைய மனைவி சுகன்யா (வயது23). இவர்கள் முதல் மாடியில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று, பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுவர்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள் வீட்டின் மொட்டை மாடியில் மது அருந்தி உள்ளனர். பின்னர் அவர்கள் மது போதையில் வீட்டின் மாடியில் இருந்த டி.வி. ஆன்டெனா உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து சுகன்யா தட்டிக்கேட்டபோது, அவரை ஆபாசமாக பேசி தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் நிலையத்தில் சுகன்யா புகார் செய்தார். அதன்பேரில் அதே பகுதியை சேர்ந்த ஹரிகரன் (19), தினேஷ்குமார், ரியாஸ் அகமது, முகமது பரீத் மற்றும் 3 சிறுவர்கள் என 7 பேரை போலீசார் கைது செய்தனர்.