பெரம்பலூர் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதுக்கு 7 பேர் தேர்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதுக்கு 7 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2023-09-03 18:30 GMT

நல்லாசிரியர் விருது

மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ம் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில், சிறந்த கல்வி தொண்டாற்றும் நல்லாசிரியர்களுக்கு "டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது" வழங்கி தமிழ்நாடு அரசு கவுரவித்து வருகிறது.

அதன்படி இந்த ஆண்டிற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதுக்கு தொடக்க கல்வி, பள்ளி கல்வியில் தலா 3 ஆசிரியர்களும், மெட்ரிக் பள்ளியில் ஒரு ஆசிரியை என மொத்தம் 7 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:-

7 பேர் தேர்வு

தொடக்க கல்வியில் மூங்கில்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சித்திக் பாஷா, மேலப்புலியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியை ஜெஸிந்தா, நொச்சிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியமாநில தேர்வுக்குழுவால் பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 7 ை செல்வராணி, பள்ளிக்கல்வியில் செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் பொன்னுதுரை, பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பாலமுருகன், குன்னம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் வையாபுரி, மெட்ரிக் பள்ளியில் பாடாலூர் அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் மீனா ஆகிய 7 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் நல்லாசிரியர் விருது வழங்கப்படவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்