பட்டாசு விற்பனை கடைகள் வைக்க 7 பேர் விண்ணப்பம்
பட்டாசு விற்பனை கடைகள் வைக்க 7 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
பட்டாசு விற்பனை கடைகள் வைக்க 7 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி வருகிற 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தற்காலிக பட்டாசு விற்பனை கடைகள் வைக்க விரும்பும் நபர்கள் ஆன்லைன் மூலமாக 6-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று வேலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் 89 நிரந்தர பட்டாசு விற்பனை கடைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் இந்தாண்டு தீபாவளியையொட்டி தற்காலிக பட்டாசு விற்பனை கடைகள் வைக்க அனுமதிக்கோரி 7 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் விரைவில் உரிமம் வழங்கப்பட உள்ளது. மேலும் கடைகள் அமையும் இடத்திற்கான வரைமுறைகள், தீத்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை குறித்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.