தூத்துக்குடியில் சூதாடிய 7 பேர் கைது
தூத்துக்குடியில் சூதாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தூத்துக்குடி தாமோதரநகரில், அதே பகுதியை சேர்ந்த எஸ்தர் ராஜ் (49), ராஜேந்திரன் (75), செல்வம் ஜெயராஜ் (52), தூத்துக்குடி டூவிபுரத்தை சேர்ந்த தனராஜ் (32), சிவந்தாகுளத்தை சேர்ந்த பாண்டி செல்வம் (38), வி.இ ரோட்டை சேர்ந்த செல்வராஜ் (50), ஜார்ஜ் ரோட்டை சேர்ந்த சந்தனகுமார் (37) ஆகிய 7 பேரும் சேர்ந்து பணம் வைத்து சூதாடிக் கொண்டு இருந்தார்களாம். உடனடியாக போலீசார் 7 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.38 ஆயிரத்து 600 ரொக்கப்பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.