கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சமூகநீதி பாதுகாப்பு கழகத்தினர் 7 பேர் கைது

கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சமூகநீதி பாதுகாப்பு கழகத்தினர் 7 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2023-01-13 19:37 GMT

தமிழ்நாடு சட்டமன்றத்தை அவமதித்ததாக கூறி கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து திருச்சி அரியமங்கலத்தில் சமூக நீதி பாதுகாப்பு கழகம் சார்பில் திருச்சி அரியமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சம்சுதீன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கவர்னர் உடனடியாக தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும், மத்திய அரசு உடனே அவரை திரும்ப பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மகளிர் அணி தலைவர் ஷைனி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்