ஆதித்தமிழர் கட்சியினர் 7 பேர் கைது
கோவில்பட்டியில் பிரதமர் மோடி உருவபொம்மையை எரிக்க முயன்ற ஆதித்தமிழர் கட்சியினர் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவில்பட்டி:
மத்திய அரசின் கட்டாய இந்தி திணிப்பை கண்டித்தும், தமிழர்களுக்கு துரோகம் செய்யும் கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தியும் நேற்று ஆதித்தமிழர் கட்சியினர் வடக்கு மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் கோவில்பட்டி தலைமை தபால் நிலையம் முன்பு பிரதமர் மோடி உருவ பொம்மையை எரிப்பதற்கு முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி மற்றும் போலீசார் அவர்களிடம் இருந்த உருவ பொம்மையை பறித்து, எரிக்க விடாமல் தடுத்தனர். பின்னர் இது ெதாடர்பாக வடக்கு மாவட்ட செயலாளர், தென்
மண்டல செயலாளர் நம்பிராஜ் பாண்டியன், தெற்கு மாவட்ட செயலாளர் ஊர்காவலன், தென்மண்டல அமைப்புச் செயலாளர் சுரேஷ் வேலன், மாநில பொதுச் செயலாளர் அகரம் சத்யா உள்பட 7 பேரை கைது செய்தனர்.