பெண்ணிடம் 7½ பவுன் தாலி சங்கிலி பறிப்பு
பெண்ணிடம் 7½ பவுன் தாலி சங்கிலி பறிக்கப்பட்டத.
திருவெறும்பூர் அருகே உள்ள பொன்மலைப்பட்டி காருண்யா நகரை சேர்ந்தவர் வீரராகவன் மனைவி சிவகாமி (வயது 50). இந்த நிலையில் இவரது வீட்டில் ஏற்கனவே கொத்தனார் வேலை செய்து வந்த ஒருவரும், அவரது நண்பரும் நேற்று காலை சிவகாமி வீட்டிற்கு வந்து குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். அப்போது தண்ணீர் எடுக்க சென்ற சிவகாமியின் கழுத்தில் கிடந்த 7½ பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.