திருப்பூர்
வெள்ளகோவிலை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் வையாபுரி நகர் பகுதியில் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து அதில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் அந்த பகுதியில் சுற்றி திரிந்த 4 வெறிநாய்கள் வேலிகளுக்குள் புகுந்தது.
அங்கு மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த ஆடுகளை சுற்றி வளைத்து கடித்துள்ளது. இதில் 2 சினை ஆடுகள் உட்பட 7 பெரிய ஆடுகள் செத்தது. ஆடுகளின் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் நாய்களை விரட்டி அடித்தனர். கடந்த 2 நாட்கள் முன் வெள்ளகோவில் கல்லாங்காட்டுவலசு பகுதியில் வெறிநாய்கள் கடித்து 6 ஆடுகள் செத்த நிலையில் நேற்று மதியம் வெறிநாய்கள் கடித்து மீண்டும் 7 ஆடுகள் செத்தது.