எழுமலை அருகே 7 நாளே ஆன பெண் சிசு திடீர் சாவு- போலீஸ் விசாரணை

எழுமலை அருகே 7 நாளே ஆன பெண் சிசு திடீரென இறந்தது . இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Update: 2023-05-02 21:36 GMT

உசிலம்பட்டி,

மதுரை மாவட்டம் எழுமலை அருகே ஜோதில்நாயக்கனூர் பஞ்சாயத்திற்கு உட்பட்டது மீனாட்சிபுரம். இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் ராஜ்குமார் (வயது 25). இவருடைய மனைவி வாசுகி (21). இவர்கள் சென்னை படப்பையில் முறுக்கு வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு 2 வயதில் பெண்குழந்தை உள்ளது. இந்த நிலையில் மீண்டும் வாசுகிக்கு உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கடந்த 26-ந்தேதி இரண்டாவதாக பெண் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்தது. தாயும் சேயும் உடல் நலத்துடன் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். இந்த நிலையில் நேற்று பகலில் பெண்சிசுவுக்கு பால் கொடுக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறி உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது அந்த பெண்சிசு இறந்தது தெரியவந்தது. இது குறித்து எழுமலை போலீசார் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்