காரைக்குடி
சாக்கோட்டை போலீஸ் சரகம் மித்ராவயல் சாலையில் முகமது அலி ஜின்னா என்பவருக்கு சொந்தமான அரிசிஆலை உள்ளது. அதன் பின்புறம் ஜின்னா மாடுகளை வளர்த்து வந்தார். அதற்காக தகர கொட்டைகள் அமைத்து வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க மேலே தென்னை ஓலைகளை வேய்ந்திருந்தார். அதில் பேன், லைட் வசதிகளும் செய்திருந்தார். இந்நிலையில் திடீரென அந்த மாட்டு கொட்டகையில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீமளமளவென பரவியது. மாடுகளின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. பின்னர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்கு சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் தீயில் கருகி கொட்டகையில் கட்டப்பட்டிருந்த 2 பசு மாடுகள், 3 சிறிய மாடுகள், 2கன்று குட்டிகள் பரிதாபமாக இறந்தன. இது குறித்து சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.