தீயில் கருகி 7 கோழிகள் சாவு

நெல்லையில் தீயில் கருகி 7 கோழிகள் செத்தன.

Update: 2023-02-19 21:34 GMT

நெல்லை பாளையங்கோட்டை எம்.கே.பி. நகரை சேர்ந்தவர் குணசேகரன் மகன் சத்தியசீலன். இவர் முன்னீர்பள்ளம் வானியங்குளம் குப்பைகிடங்கு அருகே ஓலை கொட்டகை அமைத்து அதில் கோழிகள் வளர்த்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று மர்மநபர் ஓலை கொட்டகைக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் 7 கோழிகள் கருகி செத்தன. இதுகுறித்து சத்தியசீலன் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்