மழைநீர் ஒழுகியதால் 6,7,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை
தோப்புத்துறை அரசு மாதிரி பள்ளியின் தகர கொட்டகையில் தண்ணீழ் ஒழுகியதால் 6,7,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை மழை பெய்தது. அப்போது தோப்புத்துறை மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தகர கொட்டகையால் அமைக்கப்பட்டுள்ள வகுப்பறையில் மழைநீர் ஓழுகியது. மேலும் பள்ளி வளாகத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் 6,7,8-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை விடப்பட்டது.
----