69-வது கூட்டுறவு வார விழா
69-வது கூட்டுறவு வார விழா 7 நாட்கள் நடக்கிறது.
69-வது கூட்டுறவு வார விழா 7 நாட்கள் நடக்கிறது.
திருப்பத்தூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளரும், கூட்டுறவு வார விழா குழுத் தலைவருமான எஸ்.பி.முருகேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
திருப்பத்தூர் மாவட்ட அளவில் 69-வது கூட்டுறவு வார விழா நாளை (திங்கட்கிழமை) திருப்பத்தூர் சி.கே.சி. மகாலில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடக்கிறது. விழாவில் சிறந்த கூட்டுறவுச் சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்கள் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கண்காட்சி அரங்கம் திறப்பும், திருப்பத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் மரக் கன்றுகள் நடுதல் நிகழ்ச்சியும், 16-ந் தேதி திருப்பத்தூர் கூட்டுறவு நகர வங்கியில் ரத்த தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் செய்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
17-ந் தேதி சின்னகல்லுப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கால்நடைகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாமும், 18-ந் ேததி பொன்னேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் சங்கப் பணியாளர்களுக்கு விளையாட்டுப்போட்டியும், 19-ந் தேதி கற்பகம் சிறப்பங்காடி, தூய நெஞ்சக் கல்லூரி எதிரில் விற்பனை மேளா நிகழ்ச்சியும், 20-ந் தேதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர் சந்திப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.
7 நாள் நடைபெறும் விழாவில் ஒவ்வொரு நாளும் கூட்டுறவு தொடர்பான கருத்தரங்குகள் நடைபெறவுள்ளது. எனவே, மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் பழம்பெரும் கூட்டுறவாளர்கள், அரசு மற்றும் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள், சங்க நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.