9 வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 69.1 சதவீதம் வாக்குகள் பதிவு

நாயக்கனேரி ஊராட்சியில் 9 வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 69.1 சதவீதம் வாக்குகள் பதிவானது.

Update: 2022-07-09 16:59 GMT

மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நாயக்கனேரி ஊராட்சியில் 9 வார்டு உறுப்பினர் பதவி மற்றும் ஒரு ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. நாயக்கனேரி பகுதியில் உள்ள பள்ளக் கொல்லை உண்டு உறைவிட பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய வாக்கு சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 69.1 சதவீதம் வாக்குகள் பதிவாகியது. அனைத்து வாக்குப் பெட்டிகளும் மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. 12-ந் தேதி காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்